Newsத.வெ.க மாநாடு - கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர்...

த.வெ.க மாநாடு – கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் பலி

-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27) இரவு கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

​கரூர் மாவட்டத்தில் தனது கட்சியின் தலைவர் என்ற முறையில் மக்களைச் சந்திக்க வந்த விஜய்யின் வேனைச் சுற்றி லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

விஜய் பேசத் தொடங்கியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் வேனுக்கு மிக அருகில் கூடியதால், கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

​அப்போது, விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அம்புயூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.​

​விஜய் தனது உரையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லத் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர்.

இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.​

​உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் விபரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.​

விஜய்யின் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...