Newsஆஸ்திரேலியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் - ஊடகத்திற்கு $150,000 அபராதம்

ஆஸ்திரேலியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் – ஊடகத்திற்கு $150,000 அபராதம்

-

ஊழியரை நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்ததற்காக ஆஸ்திரேலிய பொது ஒளிபரப்பு ஊடகத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

வானொலி தொகுப்பாளரை நியாமற்ற முறையில் பணி நீக்கம் செய்த ஆஸ்திரேலியாவின் தேசிய ஒளிபரப்பு ஊடகமான Australian Broadcasting Corporation (ABC) நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Antoinette Latouf என்ற பெண் வானொலி தொகுப்பாளர் 2023ம் ஆண்டு டிசம்பரில் காசா போர் குறித்து அவரது சமூக ஊடக பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதை எதிர்த்து Antoinette Latouf வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் பெடரல் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனமான ABC-க்கு சுமார் $150,000 அபராதம் விதித்துள்ளது.

Antoinette Latouf-இற்கு ஏற்கனவே A$70,000 இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், இந்த அபராதம் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனமான ABC தனது செயலின் தீவிரத் தன்மையை உணர்ந்து கொள்ள இந்த கூடுதல் அபராதம் அவசியம் என்று வழக்கை விசாரித்த நீதிபதி டாரில் ரங்கையா தெரிவித்துள்ளார்.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...