Blue Mountains பகுதியில், வேகமாக வாகனம் ஓட்டி அருகிலுள்ள வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பல வாகனங்களை சேதப்படுத்தியதாகவும், தனது Hyundai SUV-இல் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவர் வேண்டுமென்றே Hazelbrook அருகே ஒரு Honda SUV மற்றும் Glenbrook அருகே ஒரு BMW காரை மோதினார்.
பின்னர் அவர் பணியில் இல்லாத ஒரு காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யும் போது அவர் காவல்துறை அதிகாரியின் கையை கடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் சந்தேக நபர் போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.