கடந்த 27ஆம் திகதி த.வெ.க வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவர்களில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு வலி நிறைந்த தருணத்தைச் சந்தித்ததில்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டுமெனத் தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடந்த உண்மைகள் மக்களுக்கு தெரியும்.
சி…எம்.சார்…பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், கட்சி தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் நான் இருப்பேன்” எனவும் அவரது காணொளியில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஆதரவான கருத்துக்களை தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு விஜய் நன்றி கூறியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.