Newsநேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

நேபாளத்தில் 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு

-

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபாகும்.

எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

குமாரி தேர்வு செய்யப்படும் முறை:

2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும். குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...