தோல் செல்களிலிருந்து டிஎன்ஏவைப் பயன்படுத்தி செயல்பாட்டு முட்டைகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.
ஆய்வகத்தில் விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிக்க முடியும் என்று அமெரிக்க ஆராய்ச்சி குழு கூறுகிறது.
Mitomeiosis எனப்படும் இந்தப் புதிய நுட்பத்தின் கீழ், தோல் செல்களிலிருந்து தயாரிக்கப்படும் முட்டைகள் விந்தணுக்களால் கருவுறச் செய்யப்படுகின்றன. மேலும் அவற்றில் 10% 6 நாட்கள் வரை ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன.
இந்த செயல்முறை உடலுக்கு வெளியே இனப்பெருக்க செல்களை வளர்ப்பதற்கான ஒரு புதிய வழியை எடுத்துக்காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முறை ஒரு நாள் மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு சொந்தமாக குழந்தைகளைப் பெற உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, மேலும் பல முட்டைகளில் அசாதாரண எண்ணிக்கையிலான chromosomes இருப்பதால் இதன் வெற்றி மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், Oregon Health & Science பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பேராசிரியரான Paula Amato, பல்வேறு சூழ்நிலைகளில் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறுகிறார்.