பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற இந்திய உணவக உரிமையாளர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ballarat County நீதிமன்ற நடுவர் குழு, இந்த இந்திய நாட்டவரை ஒரு சிறுமியையும் ஒரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி என்று கண்டறிந்துள்ளது.
Horsham-இல் உள்ள ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளரான அவர், 2014 இல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டால் நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்வார் என்று கூறப்படுகிறது.
மார்ச் 2021 முதல் ஜனவரி 2022 வரை ஒரு டீனேஜ் ஊழியர் மற்றும் ஒரு வயது வந்த ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது உணவகமும் மார்ச் 2023 இல் மூடப்பட்டது.
இந்திய உணவக உரிமையாளருக்கு நவம்பர் 12 ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.