நியூசிலாந்து அரசாங்கம் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து புதிய Residence Pathways-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது முதுகலை, நிலை 8 டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பாகும்.
இந்தப் புதிய முறையின் மூலம் முதுகலைப் பட்டதாரிகள் எந்தப் பணி அனுபவமும் இல்லாவிட்டாலும் நியூசிலாந்தில் நிரந்தர வதிவிடத்தைப் பெறலாம்.
மேலும், நிலை 8 டிப்ளமோ மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு நியூசிலாந்தில் ஒரு வருட அனுபவத்துடன் குடியிருப்பு விசாவைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது சர்வதேச மாணவர்களுக்கு நியூசிலாந்தில் கிடைக்கும் வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.
இந்தப் புதிய விசா முறையைப் பயன்படுத்தி நியூசிலாந்தில் வசிக்க விரும்புவோர், தாமதமின்றி உரிமம் பெற்ற குடிவரவு ஆலோசகரின் உதவியைப் பெறுமாறு நியூசிலாந்து குடியேற்றத் துறை அறிவுறுத்துகிறது.