மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு செபு நகர கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் இப்போது சுனாமி எச்சரிக்கைகளை ரத்து செய்துள்ளது.
கடல் மட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான சீற்றங்களால் ஏற்பட்ட தாக்கங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சான் ரெமிஜியோ நகர சபையும் “அவசரகால நிலையை” அறிவித்துள்ளது.
போகோ நகரில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. 19 இறப்புகள் மற்றும் 119 பேர் காயமடைந்துள்ளனர்.
விசயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் தொகை இருப்பதாகக் கூறப்படுகிறது.