பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை அண்மையில் வெளியிட்டார்.
அவ்விதிகளின் படி பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி பெறுவதற்கான தகுதிக்காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத்தினரை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நடைமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் செப்டெம்பர் மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது.
மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல், ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனிலும் இது கடுமையாக்கப்பட்டுள்ளது.