ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக வானிலை ஆய்வு மையம் புதிய பெயர்களை வெளியிட்டுள்ளதாக Weatherzone தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களில் 9 முதல் 11 வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
அவற்றில் பல கடுமையான நிலைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவை நிலை 3 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வருடப் புதிய புயல் பெயர்கள் Fina, Grant, Hayley, Iggy, Jenna, Koji, Launa, Mitchell, Narelle, Oran மற்றும் Peta என்பனவாகும்.
Lggy என்ற பெயர் பிரபல ராக் பாடகர் Lggy Pop-இலிருந்து பெறப்பட்டது மற்றும் Koji என்பது ஜப்பானிய மிசோ சூப்பில் பயன்படுத்தப்படும் ஒரு விதை ஆகும்.
1960 களில் இருந்து ஆஸ்திரேலியாவில் சூறாவளி பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் அவை முழுக்க முழுக்க பெண் பெயர்களாகவே இருந்தன.
1964 இல் வெளியிடப்பட்ட Audrey மற்றும் Bessie ஆகியவை முதல் அதிகாரப்பூர்வ பெயர்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள பெரிய வெப்பமண்டல சூறாவளியின் பெயரை அந்தோணி என்று மாற்ற பணியகம் முடிவு செய்தது. அதை Alfred என்று பெயரிட்டனர்.