பிரிஸ்பேர்ணின் வடமேற்கில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Enoggera நீர்த்தேக்கத்தில் உள்ள Mount Nebo சாலை, Betts சாலை மற்றும் Camp Mountain சாலைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பாளர்கள் வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளின்படி, தீ தற்போது Mount Nebo சாலையை நோக்கி நகர்ந்து வருகிறது.
தீ விரைவாகப் பரவக்கூடும் என்பதால், இந்தச் சாலைகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காட்டுத்தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து தீயணைப்பு மற்றும் அவசர சேவை தெரிவித்துள்ளது.