மெல்பேர்ணின் Keilor East-இல் உள்ள ஒரு ALDI பல்பொருள் அங்காடியில் வாங்கிய இறைச்சிப் பொட்டலத்தில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்துள்ளார்.
அந்த நபர் செப்டம்பர் 23 ஆம் திகதி இறைச்சிப் பொட்டலத்தை வாங்கியதாகவும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
இது ஒரு முறை நடந்த சம்பவமா அல்லது பரந்த பிரச்சினையின் ஒரு பகுதியா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்க முயற்சிக்கின்றனர்.
இறைச்சிப் பொட்டலத்தில் காணப்பட்ட பொருட்கள் எவ்வளவு பெரியவை அல்லது ஆபத்தானவை என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மற்ற இறைச்சிப் பொருட்களில் இதே போன்ற பொருட்கள் இருப்பதைக் கண்டால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு விக்டோரியா காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.