Newsகனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

கனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

-

கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் காந்தாரா chapter – 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள திரையரங்குகள் கடந்த ஒரு வார காலமாக இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கு இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளன.

காந்தாரா chapter – 1, Te Kal Him OG உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகளை இலக்கு வைத்து செப்டெம்பர் 25 மற்றும் ஒக்டோபர் 2 ஆம் திகதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நள்ளிரவில் சொகுசுக் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திரையரங்குகளின் மீது சேதம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பதை கண்டுபிடிக்கும் விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...