மெல்பேர்ணின் வடகிழக்கில் உள்ள ஒரு வீட்டில் ஆபத்தான வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரியால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், வீட்டில் இருந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eltham-இன் Henry தெருவில் உள்ள அவர்களது வீட்டிற்குள் நேற்று இரவு சுமார் 11.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ஐந்து வயது குழந்தை மற்றும் எட்டு வயது குழந்தை உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்.
கேரேஜில் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த லித்தியம்-அயன் பேட்டரி தீப்பிடித்ததை அடுத்து, புகை எச்சரிக்கை மற்றும் வெடிப்பு சத்தத்தால் குடியிருப்பாளர்கள் விழித்தெழுந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தில் கேரேஜ் தான் அதிக சேதத்தை சந்தித்ததாகவும், நான்கு கார்கள் உட்பட உள்ளே இருந்த அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விக்டோரியா தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
லித்தியம்-அயன் பேட்டரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பதிவாகியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர்.
Smoke Detector உள்ள அறையிலோ அல்லது விழிப்புடன் இருக்கக்கூடிய இடத்திலோ மட்டுமே பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டும் என்று தீயணைப்புத் துறை வலியுறுத்துகிறது.