உலகெங்கிலும் உள்ள முக்கிய அமைப்புகளை குறிவைத்து சைபர் குற்றங்களைச் செய்ய மூன்று நன்கு அறியப்பட்ட சர்வதேச சைபர் குற்றக் குழுக்கள் “Trinity of Chaos” என்ற பெயரில் இணைந்து செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றங்களை LAPSUS$, ShinyHunters மற்றும் Scattered Spider ஆகிய குழுக்களே செய்கின்றன என்றும், இவை ஒன்றிணைந்து ஒரு “supergroup” ஐ உருவாக்கியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுக்கள் Qantas, Adidas, Google, Marks & Spencer, Pandora, Chanel, Tiffany & Co., Cisco போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர் தரவைத் திருடுவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் சமூக பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தி சைபர் தாக்குதல்களை நடத்துகிறார்கள். Phishing, Vishing செய்கிறார்கள். மேலும் நிறுவன மென்பொருள் மற்றும் தரவு பாதுகாப்பு பணியாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து தரவைப் பெறுகிறார்கள்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2025 இல் நடந்த சைபர் தாக்குதலில் மில்லியன் கணக்கான Qantas வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. Marks & Spencer ஆன்லைன் ஆர்டர்களை தற்காலிகமாக நிறுத்தி, அந்த ஆண்டுக்கு £300 மில்லியன் லாபத்தை இழந்துள்ளது.
“Trinity of Chaos” குழு இளைஞர்களைக் கொண்டது. மேலும் அவர்களின் அதிகார அமைப்பு, குழு தொடர்புகள் மற்றும் மொழித் திறன்களின் அடிப்படையில் இந்த சைபர் தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்களின் பாதுகாப்பில் பெரும் இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.