உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், குடியிருப்பு முகவரி அல்லது அஞ்சல் முகவரி மாறியிருந்தால், அதை விரைவில் ImmiAccount மூலம் புதுப்பிக்க வேண்டும்.
இதைச் செய்ய, நீங்கள் ImmiAccount இல் உள்நுழைந்து + icon வழியாக உங்கள் விண்ணப்ப விவரங்களைத் திறக்க வேண்டும்.
பின்னர், நீங்கள் விவரங்களைப் புதுப்பித்து, பின்னர் தொடர்பு விவரங்களை மாற்றவும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் நீங்கள் பொருத்தமான விண்ணப்பதாரரைத் தேர்ந்தெடுத்து தகவலை மாற்றுவதற்கான காரணங்களை வழங்க வேண்டும்.
அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும், நீங்கள் மாற்றிய தகவல்கள் உடனடியாகப் புதுப்பிக்கப்படும்.
இதற்கு நீங்கள் ImmiAccount-ஐப் பயன்படுத்த முடியாவிட்டால், உங்கள் புதிய தொடர்பு விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் புதுப்பிப்பு தொடர்பு விவரங்கள் படிவத்தைப் பயன்படுத்தி வழங்க வேண்டும். மேலும் அந்த விவரங்கள் 14 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும் என்று துறை கூறியுள்ளது.