மியன்மாரில் ராணுவ விழாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாங் யூ நகரில் Thadingyut திருவிழா மற்றும் இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மீது மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர் பறந்து சென்று இரண்டு குண்டுகளை வீசியதாக நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
குழு பொதுமக்களை எச்சரித்த பிறகு, கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பேர் தப்பிக்க முடிந்தது.
2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மார் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார்கள்.
இதற்கிடையில், இராணுவ ஆட்சி டிசம்பர் மாதம் தொடங்கும் தேர்தல்களை அறிவித்துள்ளது. ஆனால் ஐ.நா. நிபுணர்கள் அதை ஒரு “மோசடி” என்று நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.