AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகள் துறை (DEWR), டிசம்பர் 2024 இல் அதன் இலக்கு இணக்க கட்டமைப்பு மற்றும் IT அமைப்பை மதிப்பாய்வு செய்ய Deloitte-ஐ நியமித்தது.
அந்த அறிக்கைக்காக அரசாங்கம் $440,000 செலுத்தியது.
இருப்பினும், அறிக்கையில் உள்ள குறிப்புகள் மற்றும் அடிக்குறிப்புகளில் (footnotes) மிகவும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜூலை மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டபோது, சிட்னி பல்கலைக்கழகத்தின் நலன்புரி ஆய்வுகள் பேராசிரியரான Chris Rudge அதன் மீது கவனத்தை ஈர்த்தார்.
இந்தக் குறிப்புகளைப் படித்தவுடன், அவை தவறானவை என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரிந்தது என்றும், எந்தக் கல்வித் தாள்களும் கூகிளில் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தப் பிழைகள் AI இன் பயன்பாட்டின் முழுப் பண்புகளையும் கொண்டுள்ளன என்பதை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் Deloitte அந்த அறிக்கையை சரிசெய்து செப்டம்பரில் மீண்டும் வெளியிட்டது.
அறிக்கையின் முக்கிய முடிவுகளைப் பாதிக்காத குறிப்புகள் மற்றும் அடிக்குறிப்புகளில் பல சிறிய திருத்தங்கள் செய்யப்பட்டதாக அது கூறியது.
“Azure OpenAI GPT-4o” அடிப்படையிலான ஒரு Generative AI கருவியைப் பயன்படுத்தியதாக டெலாய்ட் ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே, ஒப்பந்தத்தின் கீழ் இறுதித் தவணையைத் திருப்பிச் செலுத்தவும், பரிவர்த்தனை முடிந்ததும் அதை பொதுமக்களுக்கு வெளியிடவும் Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.