ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity கல்வி குழுமத்தின் இரண்டு மூத்த நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
தலைமை நிர்வாக அதிகாரி Tim Hickey மற்றும் தலைமை இயக்க அதிகாரி Nishad Alani ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் NSW குழந்தை பராமரிப்பு விசாரணையின் போது $625,000 சம்பளப் பொதி தொடர்பாக Tim Hickey விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நாடு முழுவதும் 250 மையங்களில் 23,000 குழந்தைகளை மேற்பார்வையிடும் Affinity, முன்னாள் விக்டோரியன் ஊழியர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 70க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து தீவிர ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக Glen Hurley நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு இந்தத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
பாதுகாப்பான, உயர்தர குழந்தை பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் வலுவான அர்ப்பணிப்புடன் குடும்பங்களை ஆதரிப்பதில் நிறுவனம் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.