அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை 20 இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன்வசம் இருந்த பல்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது.
இந்நிலையில் காஸாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காஸாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, காஸா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.
இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை அஙஙகுள்ள ஊடகவியளாலர்கள் தெரிவித்துள்ளார்
இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.