இந்திய பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கும் விசா திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.
திறமையான ஆரம்பகால நிபுணர்களுக்கான Mobility ஏற்பாடு திட்டம் அல்லது MATES என்று அழைக்கப்படும் இந்த விசா, இந்திய குடிமக்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வேலை செய்ய அனுமதிக்கிறது.
2025/26 முன் விண்ணப்ப காலம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 14 வரை திறந்திருக்கும், மேலும் 3,000 துணைப்பிரிவு 403 MATES stream விசாக்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதியான துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுரங்கம், பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், AI, நிதி தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம், MATES விசா திட்டம் பட்டதாரிகளுக்கு சர்வதேச தொழில்முறை அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது.
மேலும் தகவலுக்கு, எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான வழிகாட்டி மற்றும் MATES தகவல் தாள் ஆஸ்திரேலிய அரசாங்க வலைத்தளத்தில் கிடைக்கின்றன.