மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய போது உயிரிழந்தார்.
மெல்பேர்ணின் பிராங்க்ஸ்டன் கடற்கரையில் நடந்த இந்த சோக சம்பவத்தில், நண்பரை காப்பாற்ற முயன்ற நபரும் நீரில் போராடி உயிரிழந்தார்.
புதன்கிழமை மாலை 5 மணியளவில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட மீட்பு படையினர் மற்றும் பொலிஸார், ஹெலிகாப்டர் உதவியுடன் இருவரையும் கயிறு கட்டி நீரில் இருந்து கரைக்கு இழுத்தனர்.
கடற்கரையில் மீட்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்த இருவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.