Newsஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

-

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain crab) இனமும், ஒளிரும் லாந்தர் சுறா மீன்(glowing lantern shark) இனமும் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் CSIRO- ஆராய்ச்சியாளர்கள் 2022ம் ஆண்டு தொடங்கிய கடல் ஆராய்ச்சி பயணத்தின் போது இந்த புதிய இரண்டு உயிரினங்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆராய்ச்சியானது, ஆஸ்திரேலிய கடற்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காஸ்கோய்ன் கடல் பூங்கா வரை நடைபெற்றது.

லாந்தர் சுறா (lantern shark)

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மேற்கு அவுஸ்திரேலிய லாந்தர் சுறா, சுமார் 40 சென்டிமீட்டர் நீளம் வளரக்கூடியது.

இவை கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 மீட்டருக்கு கீழ் காணப்படுகின்றன. இந்த மீன்களின் சிறப்பம்சம் அதன் ஒளிரும் திறன் ஆகும், இவற்றின் வயிறு மற்றும் பக்கவாட்டில் காணப்படும் போட்டோபோர்களே இந்த ஒளிரும் திறனுக்கு காரணமாகும்.

பீங்கான் நண்டுகள் (Porcelain crab)

இவை சுமார் 1.5 செ.மீ அளவு கொண்ட சிறிய ஓட்டுடைய உயிரினம் ஆகும். ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இந்த நண்டு, உணவுகளை பிடிக்க தன்னுடைய கொடுக்குகளை பயன்படுத்தாமல் தங்களுடைய முடிகளை பயன்படுத்துகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...