Meta நிறுவனம் AI-யில் பணிபுரிந்த சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த பணியாளர் குறைப்புகளால் FAIR (Fundamental AI Research) பிரிவு மற்றும் AI தயாரிப்பு மற்றும் ஆதரவு கட்டமைப்புகள் பிரிவு பாதிக்கப்படும் என்று Meta கூறுகிறது.
இருப்பினும், Metaவின் புதிய TBD ஆய்வகப் பிரிவு அல்லது super intelligence ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஊழியர்களுக்கு எந்த பணிநீக்கங்களும் இருக்காது.
இதற்கிடையில், உலகின் மிகப்பெரிய மொழி மாதிரிகளில் ஒன்றான லாமாவின் புதிய பதிப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படும் TBD ஆய்வகத்திற்கு Meta தற்போது ஆட்களை பணியமர்த்துகிறது.
உலகளவில் மாதந்தோறும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் Metaவின் AI பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், OpenAI (ChatGPT) மற்றும் Google (Gemini) போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, பெரிய மொழி மாதிரிகளை (LLMs) நுகர்வோர் ஏற்றுக்கொள்வதை அதிகரிப்பதில் Meta இன்னும் பின்தங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





