கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக பாப்பரசர் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.
தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வத்திக்கானுக்கு வருகை தந்தனர்.
இந்த பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான The Last Judgment-இன் கீழ் உள்ள Sistine Chapel-இல் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தமை குறிப்பிடத்தக்கது.





