நியூசிலாந்திலிருந்து சிட்னிக்கு பயணித்த Air New Zealand விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சிலிருந்து சிட்னிக்கு பறந்து கொண்டிருந்த NZ221 விமானம், டாஸ்மன் கடலுக்கு மேல் பறக்கும் போது hydraulic மற்றும் steering அமைப்பு சிக்கல்களை சந்தித்ததாக Air New Zealand அறிவித்துள்ளது.
இருப்பினும், விமானம் சிட்னியில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு மற்றும் இடர் அதிகாரி நாதன் மெக்ரா, ஒரு அறிக்கையில், பொறியியல் குழு விமானத்தை மீண்டும் சேவைக்குத் தயார்படுத்துவதற்கான சோதனையை உடனடியாகத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
விமானம் காலை 9 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை அடைந்தது.





