டொராண்டோவில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் Molly O’Callaghan இரண்டாவது முறையாக புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அவர் பந்தயத்தை 1:49.36 நிமிடங்களில் முடித்து, கடந்த வாரம் அவர் படைத்த உலக சாதனையை முறியடித்தார்.
இந்த வெற்றியின் மூலம், மூன்று உலக நீச்சல் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்று “Triple Crown” விருதையும் வென்றார்.
Molly O’Callaghan ஏற்கனவே ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த வெற்றிக்காக அவருக்கு $15,000 போனஸும், அமெரிக்காவில் நடந்த போட்டியில் அவர் படைத்த உலக சாதனைக்காக மற்றொரு $15,000 போனஸும் கிடைத்தது.
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை Lanny Pallister (1:51.75) மற்றும் மூன்றாவது இடத்தை நியூசிலாந்தின் Erica Fairweather (1:52.71) பெற்றனர்.





