Bacon மற்றும் Ham உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுடன் தொடர்புடைய குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து, பல்பொருள் அங்காடிகளில் பன்றி இறைச்சி மற்றும் Ham ஆகியவற்றை தடை செய்ய மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இளஞ்சிவப்பு நிறமாகவும் நீண்ட காலம் நிலையாகவும் வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
Bacon மற்றும் Ham-இல் உள்ள Nitrates Nitrosamines எனப்படும் சேர்மங்களை உருவாக்குகின்றன. இது புற்றுநோயை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் தயாரித்த அறிக்கை, புகையிலை மற்றும் Asbestos-ஐ போலவே உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறது.
ஒரு நாளைக்கு 50 கிராம் Bacon மற்றும் Ham சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 18 சதவீதம் அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது, விற்கப்படும் பேக்கனில் 90 சதவீதம் வரை Nitrates உள்ளன. அவை பெருங்குடல் புற்றுநோய்க்கு மட்டுமல்ல, மார்பக மற்றும் Prostate புற்றுநோய்க்கும் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.





