குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன.
இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை கூறுகிறது.
அவர்களில் மூன்று பேர் வீட்டில் தயாரிக்கப்பட்ட குடமிளகாய் மற்றும் மிளகாய் விழுதை உட்கொண்டது சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
அந்தப் பொருட்களில் எலி விஷமான brodifacoum இருப்பதும் சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து Logan பகுதியில் இந்த உணவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த பொருட்களை உடனடியாக அழித்து, விலங்குகளை இதுபோன்ற பொருட்களிலிருந்து விலக்கி வைக்குமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Brodifacoum உட்கொள்வது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இரத்தப்போக்கு, சிராய்ப்பு அல்லது சிறுநீர் அல்லது மலத்தில் இரத்தம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த சம்பவம் பெரும்பாலான சமூகங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஆனால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் கேத்தரின் மெக்டோகல் கூறுகிறார்.
இருப்பினும், சுகாதாரத் துறையும் காவல்துறையும் இந்த சம்பவங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் ஆலோசனைக்கு 13 HEALTH ஐ அழைக்குமாறு குயின்ஸ்லாந்து சுகாதாரம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.





