குயின்ஸ்லாந்தில் பண்டைய வரலாற்றுத் தேர்வு பேரழிவால் 9 பள்ளிகளும் 140க்கும் மேற்பட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிஸ்பேர்ண் மாநில உயர்நிலைப் பள்ளியில் பண்டைய வரலாற்றைப் படிக்கும் மாணவர்களுக்கு, இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஜூலியஸ் சீசரைப் பற்றி அறிய வேண்டியிருந்தாலும், முதல் ரோமானிய பேரரசர் அகஸ்டஸைப் பற்றி தவறாகக் கற்பிக்கப்பட்டது திங்கட்கிழமை தெரியவந்தது.
எனவே, இன்றைய வெளிப்புறத் தேர்வுக்கு அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் தயாராக வேண்டியிருந்தது.
இந்தத் தவறு மேலும் 8 பள்ளிகளிலும் நடந்திருப்பதை கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளின் போது மாணவர்களுக்கு இது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்று கல்வி அமைச்சர் John-Paul Langbroek கூறுகிறார்.
தகவல் தொடர்பு கோளாறு இதற்குக் காரணம் என்றும், அது எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான பாடத் தலைப்புகள் குறித்து பள்ளிகளுக்கு ஒரு வருடம் முன்பே தெரிவிக்கப்பட்டதாக குயின்ஸ்லாந்து பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு ஆணையம் (QCAA) தெரிவித்துள்ளது.
இன்றைய தேர்வு மாணவர்களின் இறுதி முடிவுகளில் 25% ஆக இருக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது நடத்தப்படும் மதிப்பீடுகள் போதுமான அளவு அதிகரிக்கப்படும் என்றும், மாணவர்கள் எந்த வகையிலும் பாதகமாக இருக்கக்கூடாது என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.





