உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேட்ச் எடுக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
அங்கு, அவரது மண்ணீரல் காயமடைந்து உட்புற இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில், அவரது நிலை உயிருக்கு ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயருடன் தொலைபேசியில் பேசிய சூர்யகுமார் யாதவ், தான் நலமாக இருப்பதாகக் கூறினார்.
மீண்டும் மீண்டும் scan செய்ததில் அவரது குணமடைவதில் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
காயத்தை உடனடியாக அடையாளம் கண்டு இரத்தப்போக்கு நிறுத்தப்பட்டதன் மூலம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிட்னி மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், ஷ்ரேயாஸ் ஐயரின் குடும்பத்தினரும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவரது உடல்நிலையை அறிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்று BCCI தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வீரர் நிதிஷ் குமார் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக சூர்யகுமார் அறிவித்தார். நிதிஷ் குமார் இப்போது T20 தொடரில் இணையத் தயாராக உள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் பூரண குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.





