Newsபிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

-

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும் அடங்குவர் என்று பாரிஸ் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

DNA சான்றுகள் முக்கிய சந்தேக நபரை திருட்டுடன் தொடர்புபடுத்துவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். எனினும் 88 மில்லியன் யூரோக்கள் ($156.6 மில்லியன்) மதிப்புள்ள கொள்ளைப் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பாக பிரெஞ்சு தலைநகருக்கு வெளியே உள்ள Seine-Saint-Denis-இல், ஒருங்கிணைந்த சோதனைகளின் போது புதன்கிழமை இந்த ஐந்து கைதுகள் நடந்தன.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பேரும் 30 வயதுடையவர்கள், அவர்கள் மீது குற்றப் பதிவுகள் உள்ளன. அவர்களில் ஒருவர் அல்ஜீரியாவுக்கு விமானத்தில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

வெறும் ஏழு நிமிடங்களில் இடம்பெற்ற இந்த கொள்ளைச்  சம்பவம் பிரான்ஸை உலுக்கியது. தற்போதுவரை திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்படவிலை. கைது நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...