Newsஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

-

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கருத்துகணிப்பின்படி, உள்ளுரில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரச்சினைகளில் முதல் மூன்று இடங்களில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான பிரச்சினை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் சட்டவிரோத குடியேறிகளை கையாள பல விடயங்களை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேறிகளை இராணுவ முகாமிற்கு மாற்றுதல், பிரான்ஸுடன் போடப்பட்டுள்ள One in – One out ஒப்பந்தம், டிஜிட்டல் அடையாள முறை இவ்வாறாக பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது.

இருப்பினும் தற்போது வரையில் எந்த திட்டமும் கைகொடுக்கவில்லை. இது மக்கள் மத்தியில் கடும் புயலை கிளப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் புலம்பெயர்ந்தோருக்கு சலுகைகளை வழங்குவதை மக்கள் வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் வரி உயர்வை மேற்கொள்ள அரசாங்கம் பரிசீலித்து வருதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வாழ்க்கை சுமையுடன் போராடி வரும் மக்களுக்கு இந்த வரி உயர்வு மேலும் சுமையாக மாறும். ஆகவே மக்கள் தற்போது தொழிற்கட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest news

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...

புதுப்பிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா-சீனா கல்வி உறவுகள்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் தங்கள் கல்வி கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு...