Newsகுயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

குயின்ஸ்லாந்தில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்

-

தொலைதூர தீவில் 80 வயது மூதாட்டி கப்பல் விட்டுச் சென்ற பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள Lizard தீவில் 80 வயது மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியரான 80 வயது மூதாட்டி, Coral Adventurer என்ற சொகுசுப் பயணக் கப்பலில் 60 நாள் சொகுசுப் பயணத்தில் இருந்தார்.

சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக Lizard தீவுக்கு சென்றிருந்தது. பின் அங்கிருந்த புறப்பட்ட சொகுசு பயணக்கப்பல் மூதாட்டியை கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் 80 வயது மூதாட்டி அந்த தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, மூதாட்டி மலையேற்றத்தின் போது கப்பல் குழுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவர் ஓய்வெடுக்க நின்ற போது மற்ற கப்பல் பயணிகளிடம் இருந்து பிரிந்துள்ளார்.

மூதாட்டி உயிரிழந்த நிலையில் கப்பல் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...