News16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை - பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய...

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்த ஆஸ்திரேலிய குடும்பம்

-

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து ஆஸ்திரேலியாவில் பிரபலமான குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த சமூக ஊடக தடையானது டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் “Empire Family” என அறியப்படும் பிரபலமான குடும்ப உறுப்பினர்கள், ஆஸ்திரேலியாவின் சமூக ஊடக தடைக்கு பிறகு ஆஸ்ரேலியாவில் இருந்து வெளியேறி பிரித்தானியாவுக்கு இடம்பெயர இருப்பதாக அறிவித்துள்ளது.

Empire Family என சமூக ஊடகத்தில் அறியப்படும் கணக்கில், Beck மற்றும் Bec Lea என்ற தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய 17 வயது மகன் Prezley மற்றும் 14 வயது மகள் Charlotte ஆகிய நான்கு பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பிரித்தானியாவுக்கு இடம் பெயரும் இவர்களது முடிவு, தங்களது மகள் Charlotte தொடர்ந்து வீடியோக்களை பதிவிட உதவும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் தாங்கள் சமூக ஊடகங்களை நல்ல முறையில் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...