ஆஸ்திரேலியாவில் Influenza (காய்ச்சல்) இறப்புகள் இப்போது COVID-19 இறப்புகளை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் மக்கள் தடுப்பூசி போடாததும், வைரஸைப் பற்றி கவனம் செலுத்தாததும் தான் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகஸ்ட் 2025 இல், ஆஸ்திரேலியாவில் Influenza-ஆல் 265 பேர் இறந்தனர். அதே நேரத்தில் COVID-19 தொடர்பான இறப்புகள் 195 மட்டுமே பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு 410,000 இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனை பதிவுகளும் குறிப்பிடுகின்றன.
ராயல் ஆஸ்திரேலிய மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் மைக்கேல் ரைட், Influenza-ஆல் ஏற்படும் இறப்புகளில் 10% க்கும் அதிகமானவை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகின்றன என்று கூறினார்.





