RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) தீர்வுகளை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தம் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் கிளேட்டன் ஆராய்ச்சி மையத்தில் கையெழுத்தானது. இதில் விக்டோரியன் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டேனி பியர்சன் கலந்து கொண்டார்.
Firstsource நிறுவனம் இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது மற்றும் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைப்புகள் அனுபவத்தைக் கொண்ட ஒரு நிறுவனமாக அறியப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான அறிவியல் மற்றும் புதுமை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் பட்டதாரி ஆராய்ச்சி, பயிற்சிகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் புதுமை திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் AI ஆராய்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கிறது.





