கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும், கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
நைஜீரியாவுக்கான அமெரிக்காவின் உதவி மற்றும் ஆதரவு துண்டிக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் “Guns-a-Blazing” நடத்தவும் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நைஜீரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடத் தொடங்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கும் (Pentagon) டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். நைஜீரியாவை மத ரீதியாக சீரழிந்த நாடாக சித்தரிக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறினார்.
நைஜீரியா அனைத்து மத மக்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியளித்த நாடு என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நைஜீரியாவில் தாக்குதல்கள் மத நோக்கங்களால் மட்டுமல்ல, தீவிரவாத நடவடிக்கைகள், அரசியல் பிரச்சினைகள், நில மோதல்கள் மற்றும் வளப் பிரச்சினைகளாலும் இயக்கப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





