அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
சீனாவின் கனிம உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், எனவே, சந்தையில் அதன் ஆதிக்கம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அல்பானீஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா கையெழுத்திட்ட கனிம ஒப்பந்தம், ஆஸ்திரேலியா தனது கனிம வளங்களின் மதிப்பை அதிகரிக்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், ஆஸ்திரேலியா சீனாவுடன் உறவுகளைப் பேணுகிறது, தேவைப்படும்போது ஒத்துழைப்புடனும், தேவைப்படும்போது எதிர்ப்புடனும், ஆனால் நேரடி உரையாடல் மூலம் என்று பிரதமர் கூறுகிறார்.
தென் சீனக் கடலில் சீன கடற்படை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அல்பானீஸ், ஆஸ்திரேலியா தனது வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க அவசியமானதால், “freedom of navigation exercises” தொடர்ந்து நடத்தி வருவதாகக் கூறினார்.
		




