ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் Australia’s 60 Minutes என்ற நிகழ்ச்சியில் தான் தனது முதல் பேட்டியை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் மிகவும் வேதனையானது என்றும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகுந்த மன அழுத்தத்தைத் தாங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தால் தனது குடும்பத்தினரும் மிகுந்த துயரத்தையும் வலியையும் அனுபவித்ததாகவும் விஸ்வஷ்குமார் கூறினார்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்துவிட்டாலும், அந்த விபத்து பற்றிய நினைவுகளை இன்னும் மறக்க முடியவில்லை என்றும், விபத்தில் இறந்த தனது தம்பியின் இழப்பு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இழப்பீடாகப் பெறப்பட்ட தொகை தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப போதுமானதாக இல்லை என்றும், தற்போது தனக்கு மனநல ஆதரவு, நீண்டகால சிகிச்சை மற்றும் தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவி தேவை என்றும் அவர் கூறினார்.





