NewsAndroid பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் iPhone பயனர்கள்

Android பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் iPhone பயனர்கள்

-

மோசடி மற்றும் scam குறுஞ்செய்திகளால் iPhone-ஐ விட Android பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வானது Google நிறுவனத்தால் YouGov என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. 

இதில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள 5,000க்கும் அதிகமான smartphone பயனர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இந்த ஆய்வின் மூலம், ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மோசடி குறுஞ்செய்திகளை iOS பயனர்கள் பெற்றதாக தெரியவந்துள்ளது. 

இதற்கான காரணம், Android சாதனங்களில் உள்ள Google Messages, Phone by Google போன்ற பயன்பாடுகள், குறுஞ்செய்திகள் வழியாக வரும் scam நடவடிக்கைகளை முடக்கும் வகையில் AI அடிப்படையிலான பல பாதுகாப்புகளை கொண்டுள்ளன. 

மாதத்திற்கு 10 பில்லியனுக்கும் மேற்பட்ட சந்தேகமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் Android சாதனங்கள் மூலம் தடுக்கப்படுகின்றன என்று Google தெரிவித்துள்ளது. 

ஆனால் iOS சாதனங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இல்லாததின் காரணமாக iPhone பயனர்கள் அதிகம் Spam குறுஞ்செய்திகளால் பாதிக்கப்படுவதாக Google தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...