வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை அலுவலகமாகப் பயன்படுத்தியதற்காக செலுத்திய வாடகை வரி விலக்கு என்று கூறி மெல்பேர்ண் ABC பத்திரிகையாளர் நெட் ஹால் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2021 வருமான ஆண்டில், அவரது அடுக்குமாடி குடியிருப்பு அவரது வீடாகவும், பணியிடமாகவும் இருந்தது, அங்குதான் அவர் அதிக வருமானம் ஈட்டினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
அவர் 2021 ஆம் ஆண்டில் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாடகையாக $36,326.23 செலுத்தினார்.
நெட் ஹால் தனது வீட்டில் ஒரு அறையை பணியிடமாகப் பயன்படுத்தியதால், அதற்கு செலுத்தப்பட்ட வாடகையில் ஒரு பகுதியை வரி விலக்காகப் பெறலாம் என்று கூறுகிறார்.
இந்தக் கோரிக்கையை வரி அலுவலகம் ஆரம்பத்தில் நிராகரித்தாலும், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதை அங்கீகரித்தது.
அதன்படி, அவருக்கு $5,878 வாடகை வரி விலக்கும், கார் தொடர்பான $1,148 விலக்கும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் மற்றவர்களும் இதே போன்ற கோரிக்கைகளை விடுக்கக்கூடும் என்பதால், வரி அலுவலகம் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கின் இறுதி முடிவு வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் எதிர்கால வரி சட்ட உரிமைகளை மாற்றக்கூடும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.





