மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது.
முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games, நவம்பர் 19, 2026 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டின் தரத்தை மேலும் மேம்படுத்த கூடுதல் நேரம் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் மேலும் கூறுகிறது.
GTA VI டிசம்பர் 2023 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இது உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கேம்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரண்டு GTA VI டிரெய்லர்களும் ஏற்கனவே YouTube இல் 400 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
முந்தைய Game, GTA V, 2013 இல் வெளியான மூன்று நாட்களில் $1 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதனை படைத்தது.
இதற்கிடையில், வெளியீட்டு திகதி தாமதமானதால், Rockstar-இன் தாய் நிறுவனமான Take-Two Interactive பங்கு விலை 18% வரை சரிந்தது. இருப்பினும், அதன் பின்னர் சந்தை நிலையாகிவிட்டதாக கூறப்படுகிறது.





