Newsஅமெரிக்க விசா வழங்குவதில் விசித்திரமான கட்டுப்பாடுகள்

அமெரிக்க விசா வழங்குவதில் விசித்திரமான கட்டுப்பாடுகள்

-

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் விசா நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல் நெறி முறையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் நபருக்கு தொற்று நோய் இருக்கிறதா, என்னென்ன தடுப்பூசிகளை இதுவரை அவர்கள் செலுத்தி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகிய ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.

இதில் தற்போது கூடுதலாக நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றையும் ட்ரம்ப் நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

அதில் விண்ணப்பதாரரின் உடல் நலன் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நோய்கள் பராமரிப்புக்கு இலட்சக்கணக்கான டொலர் தேவைப்படலாம் அந்த செலவுகளை ஏற்கக் கூடிய வகையில் விண்ணப்பதாரர் இருக்கிறாரா என்பதையும் விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரரின் குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...