உலகின் மிக நீண்ட வணிகப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு வரும் Qantas-இன் புதிய விமானத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. Airbus A350-1000ULR என அழைக்கப்படும் இந்த விமானம், ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு விமானங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த விமானம் தற்போது துலூஸில் உள்ள Airbus தொழிற்சாலையில் assemble செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட A350-1000ULR 22 மணி நேரம் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் கொண்டது. மேலும் 238 இருக்கைகள், கூடுதல் எரிபொருள் தொட்டி மற்றும் புதிய அமைப்புகளைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Qantas விமானங்கள் தற்போது பெர்த்தில் இருந்து லண்டனுக்கு சுமார் 18 மணிநேரம் ஆகும். மேலும் புதிய பாதை பயண நேரத்தை நான்கு மணிநேரம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு வித்தியாசமான பறக்கும் அனுபவத்தை வழங்கும் என்று Qantas தலைமை நிர்வாக அதிகாரி வனேசா ஹட்சன் கூறுகிறார். இதற்கிடையில், முதல் விமானங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.





