நியூ சவுத் வேல்ஸின் பர்னாபாவில் சரக்கு ரயிலில் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7.50 மணியளவில் குழந்தை ரயில் கடவையில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலேயே மருத்துவர்கள் ஆரம்ப சிகிச்சை அளித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிறுமி இறந்தார்.
ரயில் நெருங்கியபோது பூம் கேட் மற்றும் விளக்குகள் எரிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், விபத்து நடந்தபோது பெற்றோர் சம்பவ இடத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் குடும்பத்தினருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக காவல் கண்காணிப்பாளர் டேவிட் கூப்பர் தெரிவித்தார்.
22 வயதான ரயில் ஓட்டுநர் சட்டப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆனால் ஓட்டுநர் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்றும் டேவிட் கூப்பர் மேலும் கூறுகிறார். இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





