Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சேவையில் சிகிச்சை பெற்ற இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த மதிப்பாய்வு தொடங்கப்பட்டது.
Gold Coast குழந்தைகள் மற்றும் இளைஞர் மனநல சேவையால் வழங்கப்படும் பராமரிப்பின் திறன் மற்றும் தரத்தை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும்.
நான்கு பேர் கொண்ட குழு சேவையின் பராமரிப்பு மாதிரியை மதிப்பாய்வு செய்து அதை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகிறது, மேலும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து தலைமை மனநல மருத்துவர் ஜான் ரெய்லி, இது ஒரு சேவை மேம்பாட்டு மதிப்பாய்வு என்றும், எந்தவொரு இறப்புகள் அல்லது தனிப்பட்ட சம்பவங்கள் குறித்த விசாரணை அல்ல என்றும் கூறினார்.
தற்போது சேவையில் பின்பற்றப்படும் பராமரிப்பு மாதிரியில் கவனம் செலுத்தப்படும் என்றும், வழங்கப்படும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் தடுக்கக்கூடிய தீங்கைக் குறைப்பதற்கும் வாய்ப்புகள் அடையாளம் காணப்படும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
மதிப்பாய்வு முடிந்ததும், கண்டுபிடிப்புகளை பொதுவில் வெளியிடலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டாக்டர் ஜான் ரெய்லி கூறினார்.





