குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை இந்த மதிப்பாய்வு அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 2023 இல், மருத்துவமனையின் உள் நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, 12,500 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் ஸ்கேன்களை மருத்துவர்கள் பார்க்கவில்லை என்ற சந்தேகங்கள் இருந்தன.
ஐந்து வாரங்கள் தாமதமாக ஸ்கேன் செய்து கொண்ட பிறகு புற்றுநோய் நோயாளி ஒருவர் இறந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை முதலில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவை கூறுகிறது.
ஒரு மருத்துவக் குழு 21,491 நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தது.
இருப்பினும், மதிப்பாய்வுக்குப் பிறகு, கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருந்த ஆனால் தொடர் சிகிச்சை பெறாத நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒக்டோபர் மாத நடுப்பகுதிக்குள் மதிப்பாய்வை முடிக்க மெட்ரோ நார்த் ஹெல்த் நம்பியிருந்தது. ஆனால் அது நவம்பர் 9 ஆம் திகதி நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் Caboolture மருத்துவமனை மன்னிப்பு கேட்டு, மீண்டும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது என்று உறுதியளித்துள்ளது.





