விக்டோரியா பிராந்தியத்தில் நேற்று காலை லாரியும் காரும் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
Ballarat-இன் மேற்கே Stoneleigh-இல் உள்ள Urrambine-Streatham சாலை மற்றும் Mount William சாலை சந்திப்பில் காலை 9.30 மணிக்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்தது.
விபத்து நடந்த உடனேயே அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. ஒரு கார் கவிழ்ந்து லாரியின் கீழ் நசுங்கியதாகத் தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஒரு பெரியவரும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவரை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லாரி ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





